ஸ்கைப் மூலம் இன்று விசாரணை செய்யப்பட்ட கணேமுல்ல சஞ்சீவவின் கொலை வழக்கு


 
கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு தொடர்பாகக் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 9 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
குறித்த சந்தேக நபர்கள் தொலை காணொளி மூலம் கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலியிடம் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
 
இதன்போதே நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

இதேநேரம் திட்டமிட்ட குற்றவாளி எனக் கூறப்படும் கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பான விரிவான விசாரணை தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறையும் தனி விசாரணையைத் தொடங்கியுள்ளது.

  அதன்படி, குற்றப் புலனாய்வுத் துறையின் ழுஐஊ, தலைமை ஆய்வாளர் எஸ். கே. சேனாரத்ன உள்ளிட்ட அதிகாரிகள் குழு கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்ற வளாகத்திற்கு வந்து தொடர்புடைய விசாரணைகளைத் தொடங்கியது.

 இந்தக் கொலை தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறையால் நடத்தப்படும் விசாரணை தொடர்பாக, அதன் தலைமை ஆய்வாளர் எஸ். கே. சேனாரத்னவும் பிற அதிகாரிகளும் கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்ற வளாகத்திற்கு வந்து, சி.சி.டி.வி கமரா காட்சிகள் தொடர்பான தரவுகளை விசாரணைக்காக எடுத்துச் சென்றுள்ளனர்.