கணேமுல்ல சஞ்சீவவின் சகாவால் நீர்கொழும்பில் நேற்று பரபரப்பு : சிசிடிவி காட்சிகள் வெளியாகின

 
 
நீர்கொழும்பு பகுதியில் கணேமுல்ல சஞ்சீவவின் சகா ஒருவரால் மற்றொரு துப்பாக்கிச் சூடு முயற்சி இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை நீர்கொழும்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காமச்சோடை பொல பகுதியில் அமைந்துள்ள ஒரு கடையின் உரிமையாளர் மீது நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

 இந்த துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள், மிரிஸ் அந்தோணி என்பவரின் மூத்த மகனை குறிவைத்து தாக்க வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்த முயன்றுள்ளனர். இந்தநிலையில், சம்பவத்தின் போது துப்பாக்கி செயலிழந்ததால், அவர்கள் குறித்த இடத்தை விட்டு தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கணேமுல்ல சஞ்சீவவின், கீழுள்ள கமாண்டோ சலிந்த என்ற நபர், குறித்த வர்த்தக நிலையத்தில் கப்பம் கோரி பணம் கேட்டதாகவும் பணம் செலுத்தப்படாத நிலையிலேயே இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்த வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேக நபர்களை கைது செய்ய பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.