கணேமுல்ல சஞ்சீவ படுகொலை : கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்ட ‘‘கமாண்டோ யோ – யோ’’



ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு உறுப்பினர் கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பில் ‘‘கமாண்டோ யோ – யோ’’ என அழைக்கப்படும் நபரிடம் பொலிஸார் விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றனர்.
 
குறித்த நபர் கணேமுல்ல சஞ்சீவ மீது துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை கெஹெல்பத்தர பத்மேவுக்கு அறிமுகப்படுத்தியவர் எனக் கூறப்படுகிறது.
 
இந்த சந்தேகநபர் வெளிநாடொன்றுக்கு தப்பிச் செல்ல முற்பட்டபோது, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
மேல் மாகாண வடக்கு பொலிஸ் குற்ற விசாரணைப் பிரிவு மற்றும் விசேட அதிரடிப்படையினரின் கூட்டு நடவடிக்கையில் கமாண்டோ யோ – யோ என அழைக்கப்படும் குறித்த நபர் கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ்மா அதிபர்  தேசபந்து தென்னகோனை உடனடியாகக் கைது செய்வதற்கான திறந்த பிடியாணையை மாத்தறை நீதிவான் நீதிமன்றம் இன்று பிறப்பித்துள்ளது.

குற்றப் புலனாய்வுப் பிரிவினர் (ஊஐனு) விடுத்த வேண்டுகோளின் பேரில் இன்று (11) இந்த திறந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

2023 ஆம் ஆண்டு வெலிகமாவில் உள்ள ஒரு முக்கிய ஹோட்டலில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக இடைநீக்கம் செய்யப்பட்ட பெலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தேடப்பட்டு வருகிறார்.