மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டத்தில் இஸ்ரோ: 3 விமானிகள் தேர்வு |

ககன்யான் விண்கலத்தின் ஊடாக மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டத்தை இந்தியா ஆரம்பித்துள்ளதாக இஸ்ரோ தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு கொண்டு செல்லும் இந்த விண்கலத்தின் புகைப்படங்களை இஸ்ரோ பகிர்ந்துள்ளது.

இந்த ஆண்டு இறுதிக்குள் மூன்று விண்வெளி வீரர்களை பூமியின் சுற்றுப்பாதைக்கு அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

விண்வெளி வீரர்கள் தங்குவதற்கான விண்கலம், விண்வெளி உடை, விண்வெளி பயணத்துக்கு பிறகு பூமி திரும்பும் வீரர்கள் பத்திரமாக தரையிறங்குவதற்கான பாராசூட் ஆகியவை தயாரிக்கப்பட்டு வருகிறது.

விண்வெளிக்கு அனுப்புவதற்காக இந்திய விமானப் படையை சேர்ந்த 3 விமானிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கு ரஷ்யாவில் சிறப்பு பயிற்சி நடைபெற்று வருகின்றது எனலாம்.

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் இந்தியாவின் ககன்யான் திட்டத்தின் சோதனை ஓட்டமானது வருகின்ற அக்டோபர் 21, 2023 அன்று காலை 7 மணி முதல் 9 மணி வரை ஸ்ரீஹரிகோட்டாவில் நடைபெறும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.