ரணிலை ஆதரிப்பதற்கான தீர்மானம் தொடர்பில் சாகரவிடம் விளக்கம் கோரிய ஜீ.எல். பீரிஸ்

ஜனாதிபதி பதிவிக்கான வாக்கெடுப்பில், பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்க எடுத்த தீர்மானம் தொடர்பில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசத்திடம், கட்சியின் தவிசாளர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் விளக்கம் கோரியுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில், சாகர காரியவசத்திற்கு, ஜீ.எல்.பீரிஸ் இன்று கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

எந்த அதிகாரத்தின் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது என்றும், குறித்த தீர்மானத்தை மேற்கொள்வற்காக பங்கேற்றதாக கூறப்படும் நபர்களின் பெயர்களையும் ஜீ.எல். பீரிஸ் வினவியுள்ளார்.

அத்துடன், குறித்த நபர் தெரிவு செய்யப்பட்ட முறைமை மற்றும் குறித்த கூட்டம் இடம்பெற்ற இடம், திகதி மற்றும் நேரம் என்பனவற்றையும் வினவியுள்ளார்.

குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்ட திகதி மற்றும் நேரம் உட்பட குறித்த கூட்டத்தை அழைத்தமைக்கான விபரம் என்பனவற்றுடன், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் யாப்பின் ஏற்பாடுகளுக்கு அமைய, எந்த அடிப்பையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது என்றும் சாகர காரியவசத்திடம், ஜீ.எல். பீரிஸ் விளக்கம் கோரியுள்ளார்.