எரிபொருள் தட்டுப்பாடு- மூடப்பட்டுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்கள்!

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் எஸ்.பெர்னாண்டோ இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.டோக்கன் பெற்ற போதிலும், மறு அறிவித்தல் வரும் வரை எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு செல்ல வேண்டாம் எனவும் அவர் பொதுமக்களிடம் கோரியுள்ளார்.மேலும் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் இருப்பு கிடைத்தவுடன், டோக்கன் வைத்திருப்பவர்களுக்கு அதன் இருப்பு குறித்து தெரியப்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை எரிபொருள் நிலையங்களுக்கான எரிபொருள் விநியோக நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.கொலன்னாவை பெற்றோலிய எண்ணெய் களஞ்சியசாலையினால் இதுகுறித்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

தற்போது அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரமே எரிபொருள் விநியோகம் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை எரிபொருளை உற்பத்தி செய்யும் நாடுகளின் நிறுவனங்கள் இலங்கையில் எரிபொருளை இறக்குமதி செய்யவும், சில்லறை விற்பனையில் ஈடுபடுவதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர முன்வைத்த யோசனைக்கே அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.நாட்டில் எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதுக் குறிப்பிடத்தக்கது.