எரிபொருள் விலை திருத்தம் இன்று புதன்கிழமை இரவு இடம்பெறும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
மாதாந்த எரிபொருள் திருத்தத்தின் படி இந்த திருத்தம் இடம்பெறும் என அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதேவேளை, இன்று நள்ளிரவு மாதாந்த எரிபொருள் விலை திருத்தம் இடம்பெறாது என வெளியாகியுள்ள தகவல்கள் உண்மைக்குப் புறம்பானது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தம் வழமை போன்று இடம்பெறும் எனவும் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
இதேநேரம் நாடு முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் எரிபொருளை முன்பதிவு செய்யாததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் பிரகாரம், இன்று நள்ளிரவு முதல் எரிபொருளின் விலை குறைக்கப்படும் என கருதி எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் எரிபொருளை முன்பதிவு செய்யவில்லை.
இந்நிலை காரணமாக நாடு முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும, இன்று எரிபொருள் விலையில் திருத்தம் செய்யப்படாது எனவும் அந்த அதிகாரி கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி மேலும் கூறியுள்ளார்.
--