எரிபொருள் நிலையங்களிலும் எரிபொருளின் தரம் குறித்து சோதனை!

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து எரிபொருள் நிலையங்களிலும் எரிபொருளின் தரம் குறித்து சோதனைகளை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் ஆரம்பித்துள்ளது.எரிபொருள் நிரப்பு நிலையங்கள் வழிகாட்டுதல்களை மீறினால் உரிமம் இரத்து செய்யப்படும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.எரிபொருளின் தரம் மற்றும் பெட்ரோலிய பொருட்களை கலப்பது குறித்து முறைப்பாடுகள் கிடைத்துள்ள நிலையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.