புதிய பிரதமருக்கு ஆதரவு வழங்குவதா இல்லையா-சுதந்திரக் கட்சி இன்று தீர்மானம்!

புதிய பிரதமருக்கு ஆதரவு வழங்குவதா இல்லையா என்பது குறித்து சுதந்திரக் கட்சி இன்று ஆராயவுள்ளது.முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளது.இதன்போது புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதா இல்லையா என்பது குறித்து தீர்மானிக்கப்படவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.