அடுத்த வருடத்தில் இருந்து 02 பருவங்களுக்கும் விவசாயிகளுக்கு இலவச உரம் வழங்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர(mahinda amaraweera) தெரிவித்தார்.
அதன்படி, அடுத்த மாதம் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய உரங்கள் பெற்றுக் கொள்ளப்படும் என்றார். தற்போது நாட்டில் உரத் தட்டுப்பாடு இல்லை.
விற்பனை செய்ய முடியாத அளவுக்கு உரங்கள் கையிருப்பில் இருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.
2022 இல், நாட்டிற்கு அதிக அரிசி இறக்குமதி செய்யப்பட்டது. 2023ஆம் ஆண்டு அரசாங்கம் வழங்கிய சலுகைகளைப் பயன்படுத்தி விவசாயிகள் மிகவும் சிரத்தையுடன் பயிரிட்டதால் அரிசி இறக்குமதி வெகுவாகக் குறைந்தது
இந்த ஆண்டும் அரிசி இறக்குமதி குறிப்பிடத்தக்க அளவில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் உள்ளூர் அரிசியை மக்கள் அதிகமாக உட்கொள்ளும் சந்தர்ப்பம் உருவாகியுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.