யாழில் பூச்சிய உற்பத்தியைக் காட்டும் நான்கு முக்கிய பயிர்ச்செய்கைகள்; யாழ்.மாவட்ட விவசாயப் பணிப்பாளர்!

யாழ் மாவட்டத்தில் சில முக்கிய பயிர்ச்செய்கைகள் முற்றாக கைவிடப்பட்டு பூச்சிய உற்பத்தியை எட்டியுள்ளன.

அந்தவகையில், மிக முக்கியமான நான்கு விதமான பயிர்ச்செய்கைகளின் உற்பத்தியே இவ்வாறு வீழ்ச்சியடைந்துள்ளது.

இதனை யாழ்.மாவட்ட விவசாய பணிப்பாளர் கைலேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், இஞ்சி மற்றும் சிறிய தினை ஆகிய நான்கு முக்கிய பயிர்ச் செய்கைகள் முற்றாகக் கைவிடப்பட்டுள்ளன.

சங்கானை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட, அராலி பகுதியில் பெரிய வெங்காய பயிர் செய்கையும், கோப்பாய், உடுவில் பிரதேச செயலாளர் பிரிவில், உருளைக்கிழங்கு, தினை மற்றும் இஞ்சி ஆகிய பயிர்ச் செய்கையும் அதிகளவில் பயிரிடப்பட்டு வந்தநிலையில் தற்போது இவற்றின் உற்பத்தி முற்றாக வீழ்ச்சியடைந்துள்ளது.

நாட்டில் தொடர்ச்சியாக நிலவிய காலநிலை மாற்றத்தினால் விவசாயிகள் குறித்த பயிற்செய்கை உற்பத்தியை கைவிட்டுள்ளதாகவும், இதனால் உற்பத்தி பூச்சிய மட்டத்தை அடைந்துள்ளதாகவும் யாழ்.மாவட்ட விவசாய பணிப்பாளர் கைலேஸ்வரன் தெரிவித்துள்ளார்.