அநுர அரசின் அடுத்த அதிரடி : முன்னாள் ஜனாதிபதிகளின் இராணுவ பாதுகாப்பு நீக்கம்

முன்னாள் ஜனாதிபதிகளின் இராணுவ பாதுகாப்பு நீக்கப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.இதன்படி காவல்துறை அதிகாரிகளைத் தவிர, முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பில் உள்ள அனைத்து ஆயுதப்படை உறுப்பினர்களும் அடுத்த வாரம் முதல் திரும்பப் பெறப்படுவார்கள்.

பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால(Ananda Wijepala) இதனைத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் விசேட அறிக்கை

நாடாளுமன்றத்தில் இன்று (17) விசேட அறிக்கையொன்றை விடுத்து அவர் உரையாற்றியபோதே இதனைக் குறிப்பிட்டார்.

11 மாதங்களில்1,448 மில்லியன் ரூபா செலவு  

கடந்த 11 மாதங்களில் முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களது மனைவிகளின் பாதுகாப்புக்காக 1,448 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அண்மையில் மகிந்த ராஜபக்சவின்(mahinda rajapaksa) பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்ட காவல்துறையினரில் 116 பேர் அகற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.