முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை (Namal Rajapaksa) கைது செய்யுமாறு ஜனாதிபதி செயலகத்திற்கு மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கையை ப்ளஸ் வன் என்ற அமைப்பின் அழைப்பாளர் வின்சத யஸஸ்மினி விடுத்துள்ளார்.
அண்மையில் நாமல் ராஜபக்ச டுவிட்டரில் சவால் விடுத்திருந்த நிலையில், இந்த விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வின்சத யஸஸ்மினி கோரிக்கை விடுத்துள்ளார்.
ராஜபக்சக்கள் மக்களிடம் கொள்ளையடித்த பணத்தை மீட்டு எடுக்கும் நோக்கிலேயே, மக்கள் அநுரகுமார திஸாநாயக்கவை (Anurakumara Dissanayake) ஜனாதிபதி பதவியில் அமர்த்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்களின் பணத்தை கொள்ளையிட்டவர்கள் இவ்வாறு பிரசாரம் செய்வதினை விரும்பவில்லை என்றும் வின்சத யஸஸ்மினி தெரிவித்துள்ளார்.
பெறுமதியற்ற நாமலை இந்த தேர்தலில் பூச்சியமாக்கி கொள்ளையிட்ட மக்கள் பணத்தை மீள கைப்பற்றிக்கொள்ள வேண்டுமென யசஸ்மினி ஜனாதிபதியிடம் கோரியுள்ளார்.
இதேவேளை, பொது நிதிகள் கொள்ளையிடப்பட்டு உகாண்டா மற்றும் சீஷெல்ஸ் உட்பட பல்வேறு நாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்த கூற்றுக்களின் காணொளி காட்சிகளை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, அவற்றை நிருபித்து காட்டுமாறு சவால் விடுத்திருந்தார்.
அத்துடன் ஜனாதிபதி தனது குற்றச்சாட்டுகளை நிரூபிக்க வேண்டிய நேரம் இதுவாகும் இவ்வாறு நாமல் ராஜபக்ச பதிவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.