6 வருடங்களின் பின் விடுதலையான விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் கட்டளை தளபதி

விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் அம்பாறை மாவட்ட கட்டளை தளபதி 6 வருட சிறை தண்டனைக்கு பின்னர் நேற்று(20) விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

2015 ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பயங்கரவாத ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இன்றையதினம் 6 வருட சிறை தண்டனை நிறைவு பெற்ற நிலையில் மட்டக்களப்பு நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு புனர்வாழ்வு பெற்று விடுதலை செய்யப்பட்டிருந்த முன்னாள் அம்பாறை மாவட்ட கட்டளைத் தளபதி தற்போது நிரந்தரமாக விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது

முன்னாள் விடுதலை புலிகளின் அம்பாறை மாவட்ட கட்டளை தளபதியாக செயற்பட்டிருந்த ராம் கடந்த 2009 ஆம் ஆண்டு மே 19 யுத்தம் முடிந்த பின்னர் திருகோணமலையில் வைத்து கைது செய்யப்பட்டு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்தார்.

இதனையடுத்து இராணுவ புலனாய்வு பிரிவினரின் கண்காணிப்பின் கீழ் அவர் அம்பாறை தம்பிலுவில் பிரதேசத்தில் குடியேறி வாழ்வாதாரமாக விவசாயம் மேற்கொண்டு வந்தார்.

இந்த நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் பெற்று ரணில் அரசாங்கம் ஆட்சியேறியதும் சாவகச்சேரி பிரதேசத்தில் தற்கொலை குண்டு அங்கி மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டின் பெயரில் முன்னாள் விடுதலை புலிகளின் அம்பாறை மாவட்ட கட்டளை தளபதி ராமை தம்பிலுவில் வைத்து பயங்ரவாத தடுப்பு பிரிவினரால் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணையின் பின்னர் அவருக்கு எதிராக வழக்கு தொடந்து அவர் தொடர்ந்து வெலிக்கடை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

இதனை தொடர்ந்து அவர் பின்னர் மட்டக்களப்பு சிறைச்சாலையில் அடைக்கப்பட் நிலையில் அவருக்கு வழங்கப்பட்ட 6 வருடகால தண்டனைக்காலம் முடிவுற்ற நிலையில் நேற்று அவருக்கு மட்டக்களப்பு நீதிமன்றில் விடுதலை வழங்கப்பட்டு அவரை விடுதலை செய்துள்ளனர்.