இலங்கை மற்றும் சர்வதேச இறையாண்மை முறி உரிமையாளர்களுக்கும் இடையில் கொள்கை ரீதியான இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன.
லண்டன் பங்குச்சந்தையை மேற்கோள்காட்டி இந்த தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச இறையான்மை சந்தையில் இருந்து பெறப்பட்ட 12.5 பில்லியன் அமெரிக்க டொலர் கடன்தொகை சீன அபிவிருத்தி வங்கியிடம் இருந்து பெறப்பட்ட 3.3 பில்லியன் அமெரிக்க டொலர் கடன்தொகையினையும் மறுசீரமைப்பதற்கான சந்தர்ப்பம் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய 17.5 பில்லியன் டொலர் கடன்தொகையினை மறுசீரமைப்பதற்கு சர்வதேச இறையான்மை முறிஉரிமையாளர்களுடன் இலங்கை இணக்கப்பாட்டினை எட்டியுள்ளது.
இதன்படி இலங்கை மற்றும் சர்வதேச இறையாண்மை முறி உரிமையாளர்களுக்கு இடையே கொள்கை அளவிலான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக லண்டன் பங்குச்சந்தை அறிவித்துள்ளது.
அத்துடன் குறித்த கடன்தொகையின் தற்போதைய மதிப்பீட்டில் இருந்து 40.3சதவீதம் தள்ளுபடி செய்யப்படுகின்றது.
இதனூடாக இலங்கைக்கு கடன்நிவாரணம் கிடைக்கப்பெறும் என்பதுடன் வட்டிக்கொடுப்பனவுகளை குறைப்பதன் ஊடாக நாட்டில் நிதிஸ்திரதன்மை பலப்படுத்தப்படும் எனவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிக்கையின் ஊடாக தெரிவித்துள்ளது.