விடுதலைப்புலிகளின் வழியை பின்பற்றிய சிறிலங்கா இராணுவம் - ஒப்புக்கொண்டார் பொன்சேகா

இராணுவ நிர்வாகத்துக்கான செலவு நாளாந்தம் அதிகரித்து செல்லுமே தவிர குறைவடையாது. நாட்டில் யுத்தம் இல்லை என்பதற்காக பாதுகாப்பு அமைச்சுக்கு நிதி ஒதுக்காமல் இருக்க முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பியும் முன்னாள் இராணுவத்தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா தெரிவித்தார்.

நாட்டில் யுத்தம் இல்லை ஆகவே பாதுகாப்பு துறைக்கு அதிக கவனம் செலுத்த வேண்டிய தேவை கிடையாது என ஒரு தரப்பினர் குறிப்பிடுகிறார்கள்.நாட்டில் யுத்தம் இல்லை என்பதற்காக பாதுகாப்பு அமைச்சுக்கு நிதி ஒதுக்காமல் இருக்க முடியாது.

முன்னறிவிப்பு விடுத்ததன் பின்னர் நாட்டில் பாதிப்பு ஏற்படாது. ஆகவே பாதுகாப்பு துறை எந்நிலையிலும் அவதானத்துடனும், முன்னேற்றகரமாகவும் காணப்பட வேண்டும். அனர்த்தம் ஒன்று நேர்ந்ததன் பின்னர் பாதுகாப்பு படையினரை பலப்படுத்த அவதானம் செலுத்த முடியாது.

யுத்த காலத்திற்கு முன்னர் 11 ஆயிரம் இராணுவத்தினரே இருந்தனர். விடுதலைப் புலிகள் அமைப்பு படை பலத்தில் முன்னேற்றமடைந்து செல்வதை கண்டே, இராணுவத்தை பலப்படுத்தினோம். விடுதலை புலிகளின் யுத்த உபகரணங்களை அறிந்ததன் பின்னரே இராணுவத்திற்கு பாதுகாப்பு உபரணங்கள் பெற்றுக் கொள்ளப்பட்டது.

இவ்வாறான நிலையில் தான் யுத்தம் 30 வருட காலம் நீண்டு சென்றது. எமது விருப்பத்துடன் இந்திய இராணுவம் இலங்கைக்கு வருகை தரவில்லை. இந்திய படைகளை எம்மால் தடுக்கவும் முடியவில்லை.

ஆனால் தற்போது நிலைமை மாற்றமடைந்துள்ளது. நாட்டை இல்லாதொழிக்க இராணுவத்தினரும், பாதுகாப்பு தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்கவில்லை.நாட்டை பாதுகாக்க இராணுவத்தினர் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளனர் என்றார்.