காரைதீவில் வெள்ளத்தில் சிக்கி குழந்தைகள் உட்பட 5 பேர் மாயம்

காரைத்தீவு - மாவடிபள்ளி பகுதியில் உழவு ஒன்று வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டதில் 7 பேர் காணாமல் போயுள்ளனர்.

அதில் 2 மாணவர்கள் மீட்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளை பெற்று வருகின்றனர். 

இருவர் மீட்பு 

அம்பாறை அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதி பணிப்பாளர் எம்.ஏ.சி.எம்.ரியாஷ் இதனைத் தெரிவித்துள்ளார்.

எனினும், காணாமல் போயுள்ளவர்களின் விபரங்கள் இதுவரையில் வெளியாகவில்லை. 

அதேநேரம் காணாமல் போயுள்ளவர்களை மீட்கும் நடவடிக்கையில் கடற்படையினர் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.