வெளிநாடொன்றிலிருந்து முதன்முறையாக இலங்கை வந்த சுற்றுலா பயணிகள்

 இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக ஐஸ்லாந்திலிருந்து (Iceland) சுற்றுலாப் பயணிகள் குழுவொன்று இன்று (நவம்பர் 5) காலை இலங்கையை வந்தடைந்துள்ளது.

24 மணிநேர நீண்ட விமானப் பயணத்தின் பின்னர், டுபாயில் (Dubai) இருந்து எமிரேட்ஸ் எயார்லைன்ஸின் EK-650 விமானத்தில் இன்று காலை 8:33 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

24 பேர் கொண்ட இந்தக் குழு 14 நாட்களுக்கு  இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சுற்றுலாப் பயணிகள் கொழும்பு, ஹபரணை, கண்டி, சீகிரிய, தம்புள்ளை, பெந்தோட்டை, எல்ல மற்றும் யால ஆகிய பகுதிகளுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

இந்த நிலையில், சமீப காலமாகவே இலங்கைகு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன், இந்த வருடத்தின் கடந்த 10 மாதங்களில் 16 இலட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ளனர்.