திருகோணமலை - கெமுனுபுர, பிள்ளையார் சந்தியில் இன்று (16) அதிகாலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானார்.
மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த ஒருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்டு தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் பலியானவர் ஸ்ரீபுர - காவன்திஸ்ஸபுர பகுதியைச் சேர்ந்த 26 வயதானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு ரி-56 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காணி பிரச்சினை ஒன்று தொடர்பாகவே, இந்த துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தநிலையில், சந்தேகநபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.