'பொடி சுத்தா" மீதான துப்பாக்கி சூடு : விசாரணையில் வெளிவந்த முக்கிய தகவல்


நாட்டில் பல்வேறு விதமான குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
அதனடிப்படையில்,

காலி, ஹபராதுவ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு ஒழுங்கமைக்கப்பட்ட இரு கும்பல்களுக்கு இடையிலான தகராறின் காரணமாக ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

காலி, ஹபராதுவ பகுதியில் அடையாளம் தெரியாத இருவர் நேற்று முன்தினம் 28ஆம் திகதி மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் இருவர் காயமடைந்த நிலையில் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த பொடி சுத்தா என்ற நபர் ஹபராதுவ பிரதேசத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் என்பதுடன், போதைப்பொருள் கடத்தல், பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் பல குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டவரெனவும் சுமார் இரண்டு வருடங்கள் இராணுவத்தில் பணியாற்றி விட்டு வெளியேறியவரெனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதலை நடத்திய ஆயுததாரிகள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பதுடன் ஹபராதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.