கலேவெல, கலாவெவ வீதி, கொங்கொல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்று தீப்பிடித்து முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.
குறித்த தீ விபத்தானது நேற்று (15) பிற்பகல் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வீட்டில் தாய் மற்றும் தந்தையும் அவர்களது மூன்று பிள்ளைகளும் வசித்து வந்துள்ளனர், தீ விபத்தில் யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை.
கிழக்கு மாகாண தனியார் வைத்தியசாலைகளின் பிரதிநிதிகளுடன் ஆளுநர் கலந்துரையாடல்
கிழக்கு மாகாண தனியார் வைத்தியசாலைகளின் பிரதிநிதிகளுடன் ஆளுநர் கலந்துரையாடல்
இதற்கமைய, கிராம உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலாளரினால் இக்குடும்பத்தை தற்காலிகமாக தங்கவைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பெற்றோர்கள் கூலி வேலை செய்து சம்பாதிக்கும் பணத்தில் மட்டுமே தங்கள் குழந்தைகளுக்கு உணவளிக்க போராடி வருகின்ற நிலையில், குறித்த குழந்தைகள் 05, 10 மற்றும் 12 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் அவர்களின் பாடசாலை புத்தகங்கள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.