இரத்தினபுரியில் மனைவியையும் மகனையும் கொடூரமாக தாக்கிய நிலையில் கணவன் உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தாக்குதலில் மனைவி உயிரிழந்ததுள்ளதுடன், மகன் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இரத்தினபுரி நிவிதிகல தெல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி மனைவியையும் மகனையும் கூரிய ஆயுதத்தால் தாக்கி கணவன் உயிரை மாய்த்துள்ளார்.
மனைவியை கத்தியால் குத்தி கொன்றுவிட்டு, மூத்த மகனையும் கொடூரமாக தாக்கிய நிலையில் அந்த நபர் வீட்டின் மின்கம்பத்தில் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளார்.
பலத்த வெட்டுக்காயங்களுக்கு உள்ளான மகனின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
48 வயதுடைய ஆண் ஒருவரும் அவரது மனைவியான 39 வயதுடைய பெண்ணுமே சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர். மகனுக்கு 18 வயது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகன் பலத்த வெட்டுக்காயம் மற்றும் அதிக இரத்தப்போக்கு காரணமாக இரத்தினபுரி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இவர்களுக்கு மேலும் மூன்று பிள்ளைகள் உள்ள நிலையில் அவர்கள் தற்போது உறவினர்களின் பராமரிப்பில் உள்ளனர். நிவித்திகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.