பாகிஸ்தானில் பாதுகாப்புக்காக மகளின் தலையில் CCTV கேமரா தந்தை ஒருவர் பொருத்தியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த அசாதாரண நடவடிக்கை, பரவலான விவாதத்தைத் தூண்டியதுடன், பெற்றோரின் அதீத பாதுகாப்பு மற்றும் தனிப்பட்ட தனியுரிமை குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
வீடியோவில், அந்த பெண் “தனது நடமாட்டம் மற்றும் செயல்பாடுகளை கண்காணிக்க தந்தை தலையில் கேமராவை பொருத்தியதாக தெரிவித்துள்ளார்”.
மேலும் தந்தையின் இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும், இது தனது பாதுகாப்புக்கு அவசியம் என்று நம்பியதாகவும் அந்த இளம்பெண் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்ட இந்த வீடியோவில், பல பயனாளர்கள் அதிர்ச்சியையும் கவலையையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
next level security pic.twitter.com/PpkJK4cglh
— Dr Gill (@ikpsgill1) September 6, 2024