இலங்கைக்கு தனது காதலனுடன் வருகை தந்த நெதர்லாந்து நாட்டுப் பெண் ஒருவர் தவறான செயலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
சுற்றுலாப் பயணிகளுக்கு பூ விற்பனை செய்த 15 வயது சிறுவனே இவ்வாறான செயலை செய்துள்ளதாகவும் அவரை கைது செய்துள்ளதாகவும் கந்தபொல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
30 வயதுடைய நெதர்லாந்து பெண் தனது காதலனுடன் நுவரெலியா, கந்தபொல பகுதிக்கு சென்றிருந்த போது பூ விற்பனை செய்யும் 15 வயது சிறுவன் பூங்கொத்து ஒன்றை கொடுத்துள்ளார்.
பொலிஸ் முறைப்பாடு
இதன்போது சிறுவன் தன்னை கட்டிப்பிடித்து தனது அங்க சேட்டையில் ஈடுபட்டதாக நெதர்லாந்து நாட்டை சேர்ந்த பெண் தனது காதலனுடன் பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாடு செய்துள்ளார்.
அதற்கமைய, பொலிஸார் விசாரணை நடத்தி சிறுவனை அடையாளம் கண்டு கைது செய்துள்ளனர்.