8 மாத குழந்தையுடன் உயிர் தப்பிய குடும்பம் : பொலநறுவை சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி


 
அநுராதபுரம் - குருநாகல் பிரதான வீதியின் தலாவ மொரகொட சந்திக்கு அருகில் ஏற்பட்ட பயங்கர விபத்து ஒன்று, அங்கிருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியிருந்தது.

8 மாத குழந்தை மற்றும் தமது மனைவியுடன் நபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் பயணிக்கிறார்.

இதன்போது, அந்த மோட்டார் சைக்கிளை, பொருட்களை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று முந்திச் செல்ல முற்பட்ட போதே, இந்த விபத்து நேர்ந்துள்ளது.

லொறி - மோட்டார் சைக்கிள் மீது மோதியதில், குழந்தை சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளது.

விபத்தின் பின்னர் கோபமடைந்த மோட்டார் சைக்கிளை செலுத்தியவர், லொறியின் சாரதியை தாக்கும் காட்சிகளும் சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ளது.

விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை தலாவ பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, நொச்சாகம நகரில் சொகுசு பேருந்து ஒன்று சைக்கிள் ஒன்றுடன் மோதியதில், அந்த சைக்கிளை செலுத்திய நபர் ஸ்த்தலத்திலேயே பலியானார்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் 71 வயதுடையவர் என குறிப்பிடப்படுகின்றது.