மின்தடை நேரங்கள் நீடிப்பு!

எதிர்பாராத மின்சார பாவனை அதிகரிப்பு காரணமாக P முதல் W வரையான வலயங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மேலதிகமாக ஒரு மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளது.இதற்கமைய, குறித்த வலயங்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 வரையான காலப்பகுதியினுள் ஒரு மணிநேர மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.முன்னதாக, P முதல் W வரையான வலயங்களில் மாலை 3 மணி முதல் இரவு 11 மணிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் 2 மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.இந்நிலையில், தற்போது மின்துண்டிப்பு நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது என்பதுக் குறிப்பிடத்தக்கது.