முகமாலையில் வெடி விபத்து-ஒருவர் படுகாயம்!

முகமாலை பகுதியை அண்டிய பிரதேசத்தில் வெடி பொருட்களை அகற்றும் பணி இடம்பெற்ற போது வெடி விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.வெடி பொருள் ஒன்றினை தவறாக கையாண்ட பொழுது அது வெடித்ததில் படுகாயமடைந்த ஒருவர் நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வெளிநாட்டு நிறுவனம் ஒன்று முகமாலை பகுதியில் வெடி பொருட்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது.அதில் பணிபுரியும் நபர் வெடிபொருள் ஒன்றினை அகற்ற முற்பட்ட போது, அது வெடித்ததாக தெரிவிக்கப்படுகிறது.சம்பவம் தொடர்பாக பளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.