காவல்துறையினரின் அராஜகம்! 19 வருடங்களின் பின் மரணதண்டனை தீர்ப்பளித்த நீதிபதி

பேலியகொட காவல் நிலையத்தில் பணியாற்றிய  இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (04) வழங்கியுள்ளது.

கடந்த  2005ஆம் ஆண்டு பேலியகொட காவல்துறையினரால்  சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு, அவரை அடித்துக் கொலை செய்த குற்றச்சாட்டில் இவர்கள் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நீண்ட விசாரணையின் பின்னர் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க இந்தத் தீர்ப்பை வழங்கினார்.