புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் - நீதிமன்றின் அதிரடி உத்தரவு

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு உயர் நீதிமன்றம் இடைக்கால  தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

குறித்த உத்தரவானது இன்றையதினம் (18.11.2024) பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ப்ரீத்தி பத்மன் சூரசேன, அச்சல வெங்கப்புலி , மஹிந்த சமயவர்தன ஆகியா நீதியரசர்களைக் கொண்ட உயர்நீதிமன்ற குழாம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

மேற்படி பரீட்சையில் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாக பெற்றோர்கள் தாக்கல் செய்த மனுவை விசாரித்து , உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதேவேளை, க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பான அனைத்து பிரத்தியேக வகுப்புகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி குறித்த தடையானது நாளையதினம் (19.11.2024) நள்ளிரவு முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தகவல் பரீட்சை திணைக்களத்தினால் (Department of Examinations) வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, 2024ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தர பரீட்சை எதிர்வரும் நவம்பர் 25ஆம் திகதி ஆரம்பமாகி டிசம்பர் 20ஆம் திகதிவரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.