இரண்டு மாதங்களுக்கு மேலதிகமாக தேங்கி இருக்கும் அத்தியாவசியப் பொருட்கள்!

கொழும்பு துறைமுகத்தில் தேங்கி இருக்கும் அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய சுமார் 1,700 கொள்கலன்கள் இரண்டு மாதங்களுக்கு மேலதிகமாக அங்கு இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது,மத்திய வங்கியினால் வணிக வங்கிகளுக்கு டொலர்களை விடுவிப்பதில் ஏற்பட்டுள்ள தாமதமே இதற்கு காரணம் என அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.இந்த விடயம் தொடர்பாக பல சந்தர்ப்பங்களில் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை இடம்பெற்ற போதிலும், இதுவரையில் உரிய தீர்வு கிடைக்கப்பெறவில்லை என அச்சங்கம் மேலும் கூறியுள்ளது.