வெளிநாடு ஒன்றில் இலங்கையர்களுக்கான வேலைவாய்ப்பு

இலங்கை (Sri Lanka) தொழிலாளர்களுக்கு போலந்தில் (Poland) இலக்கு துறைகளில் (Targeted Sectors) வேலைவாய்ப்புக்களை வழங்க அந்நாட்டு அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி (Ali Sabry) தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தத்தின் கீழ் இந்த வேலைவாய்ப்புகள் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி போலந்துக்கு விஜயம் செய்த பின்னர் இது தொடர்பில் தனது "எக்ஸ்" (X) கணக்கில் பதிவொன்றையும் வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கையர்கள் போலந்திற்குள் நுழைவதற்கான விசா வசதிகளை தளர்த்துவது குறித்தும் இந்த விஜயத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், தனது கோரிக்கைகள் தொடர்பாக போலந்து வெளிவிவகார அமைச்சரின் பதில்களுக்கு நன்றி தெரிவிப்பதாக வெளிவிவகார அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.