கம்பளை கல்வி அலுவலகத்தின் மலசலகூடத்தில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கம்பளை கல்வி அலுவலகத்தில் உதவியாளராக கடமையாற்றிய கம்பளை ரத்மல்கடுவ பிரதேசத்தை சேர்ந்த 44 வயதுடைய நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் கம்பளை காவல் நிலையத்தில் நேற்று (13) மாலை முறைப்பாட்டின்படி கம்பளை காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சடலம் அடையாளம் காணப்பட்டதையடுத்து பிரேத பரிசோதனைக்காக கம்பளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றன.
 
    
 
                                                 
                                                 
                
             
                
             
                
             
                
             
                
             
                
             
                
            