தவறான புள்ளிவிபரங்களை முன்வைத்து மின் கட்டண அதிகரிப்பு : 60 பில்லியன் இலாபம் என தகவல்

தவறான புள்ளிவிபரங்களை முன்வைத்து மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,

மின்சார கட்டணத்தை 20 வீதத்தால் குறைக்கும் திறன் மின்சார சபைக்கு இருக்கிறது.

தவறான புள்ளிவிவரங்களை முன்வைத்து மின் கட்டணத்தை மின்சார சபை உயர்த்தியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, சட்டவிரோதமான முறையில் மக்களிடம் பணம் அறவிடுவதன் மூலம் மின்சார சபை 60 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான இலாபத்தை ஈட்டியுள்ளதாக மின்சார பாவனையாளர் சங்கத்தின் சஞ்சீவ தம்மிக்க குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம் மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான பிரேரணை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எதிர்வரும் 28 ஆம் திகதி ஒன்றுகூடவுள்ளது.

மேலும் மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பான யோசனை தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை மின்சார சபையின் மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதற்கான யோசனை கடந்த 22 ஆம் திகதி பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த திருத்தத்தில் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் அதிகரிக்கப்பட்ட மின்சார கட்டணத்தை குறைக்க முன்மொழியப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அண்மையில் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

கடந்த வருடம் ஒக்டோபரில், உள்நாட்டு மற்றும் மத வழிபாட்டுத் தலங்களுக்கு 18மூ, தொழிற்சாலைகள் மற்றும் ஹோட்டல்களுக்கு 12மூ, அரசு நிறுவனங்களுக்கு 24மூ ஆக மின் கட்டணம்அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.