மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கமைய மின் கட்டணத்தை 100 சதவீதத்தினால் அதிகரிப்பதற்கு அனுமதி கிடைத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
எவ்வாறாயினும், இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் வகையில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்துவதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தயாராகவுள்ளதாக அறியமுடிகின்றது.
 
    
 
                                                 
                                                 
                
             
                
             
                
             
                
             
                
             
                
             
                
            