மகிந்தவினாலே மக்களுக்கு இந்த நிலை..! உண்மையை வெளிப்படுத்திய சகோதரர்

முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச செய்த வேலையால் மக்கள் மின்சாரக் கட்டணத்தைச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவரது சகோதரன் சமல் ராஜபக்ச தெரிவித்தார்.

ஹம்பாந்தோட்டை மக்கள் மத்தியில் நேற்று உரையாற்றிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இன்று மின்சார கட்டணம் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றது. நீர் கட்டணம் 5000 ரூபாய் செலுத்த வேண்டியிருந்தால் நீர் இணைப்பு துண்டிக்கப்படுகின்றது.

மின்சார கட்டணம் செலுத்தவில்லை என்றால் மின்சாரம் துண்டிக்கப்படுகின்றது.

அண்மையில் ஒருவர் வந்து தனக்கு 18000 ரூபா மின்சாரக் கட்டணம் இருப்பதாக கூறி பணம் கேட்டார். நான் எப்படி அவ்வளவு பெரிய தொகையை கொடுத்து உதவ முடியும். இதனால் சிறிய தொகை ஒன்றை கொடுத்து அனுப்பினேன்.

மகிந்த செய்த வேலையால் தான் இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

அவர் அனைவருக்கும் மின்சாரம் வழங்கினார். அதனை அனைவரும் பெற்று கொண்டனர். ஆனால் இன்று கட்டணம் செலுத்த முடியாமல் உள்ளதென எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.