இலங்கையில் தேர்தல் வேண்டும் - புலம்பெயர் தேசங்களிலும் வலுக்கும் ஆர்ப்பாட்டங்கள்!

இலங்கையில் விரைவில் தேர்தல் நடத்தப்படவேண்டும் என பல்வேறு தரப்பினரும் தமது எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றனர்.

அந்தவகையில் தற்போது புலம்பெயர் தேசங்களில் உள்ளவர்களும் தேர்தலை நடத்தக்கோரி ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் தேர்தலை விரைவில் நடத்துமாறு இத்தாலியின் மிலானோ நகரில் இலங்கையர்கள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

உள்ளுராட்சி மன்ற தேர்தல் ஒத்திவைப்பு உள்ளிட்ட பல காரணங்களை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் இலங்கையர்கள் மட்டுமல்லாது வெளிநாட்டவர்களும் பங்கேற்றதாக கூறப்படுகின்றது.