யாழில் தமிழரசுக் கட்சிக் கூட்டத்தில் குழப்பநிலை

பொதுத் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு (Election Commission) கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணித்தியாலங்களில் 231 தேர்தல் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், வட்டுக்கோட்டை - சுழிபுரம் பகுதியில் நேற்றைய தினம் (11.11.2024) நடைபெற்ற  இலங்கை தமிழரசுக் கட்சியின் பிரச்சார கூட்டத்தில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த கூட்டத்தில் சுமந்திரன் உரையாற்றிய பின்னர் கூட்டத்தில் இருந்த சிலர் கேள்விகள் கேட்க முற்பட்டனர்.

இதன்போது கூட்டத்தில் குழப்ப நிலை ஏற்பட்டது.

அங்கு முறுகல் நிலை ஏற்பட்டவேளை அவ்விடத்திற்கு வருகை தந்த காவல்துறையினர் கேள்வி கேட்டவர்களை வெளியேற்றினர்.