முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை குறைவு!

முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலைகள் தற்போது குறைந்துள்ளன என கோழிப்பண்ணை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.அதன்படி கோழி இறைச்சியின் விலை 50 முதல் 60 ரூபாய் வரை குறைக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.அதற்கமைய 750 ரூபாயாக இருந்த ஒரு கிலோ கோழி இறைச்சி தற்போது 700 ரூபாயிலிருந்து 690 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் முட்டையொன்றின் விலை 3 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய 26 ரூபாயாக இருந்த முட்டை தற்போது 23 ரூபாயாக விற்பனை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.