கிழக்கு பல்கலைக்கழகத்தில் மாவீரர் நாள் மிகவும் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தில் மரணித்த உறவுகளுக்காக வருடாந்தம் நவம்பர் 27 ஆம் திகதி மாவீரர் நாள் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.
நவம்பர் 21 முதல் மாவீரர் வாரம் ஆரம்பிக்கப்பட்டு நவம்பர் 27 துயிலும் இல்லங்களில் மாலை 6.05 இடம்பெறும் சுடர் ஏற்றும் நிகழ்வுடன் நிறைவுபெறும்.
மாவீரர்களுக்கான வணக்க நிகழ்வு
அந்தவகையில், பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் மாவீரர்களை நினைவு கூர்ந்து சுடரேற்றி தமது வணக்கத்தை செலுத்தினர்.
கொட்டும் மழைக்கு மத்தியிலும் மாணவர்கள் மாவீரர்களுக்கான வணக்க நிகழ்வில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.