உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய விசாரணைகளுக்கு அமைய, மட்டக்களப்பு வலயத்தின் உளவுத்துறை பொறுப்பதிகாரியாகச் செயற்பட்ட பொலிஸ் பரிசோத கர் எஸ்.எஸ்.சரத் சமந்த சி.ஐ.டி. யினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் (21) இரவு அவரை சி.ஐ.டி.யினர் கைது செய்துள்ளனர். விசாரணைக்கு அழைக்கப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின்னரே அவர் கைது செய்யப்பட்டதாக சி.ஐ.டி.யினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட பொலிஸ் பரிசோதகர் தற்போது வான் எல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்ததாக கூறிய சி.ஐ.டி.யினர் அவரை 72 மணி நேர தடுப்புக் காவலின் கீழ் வைத்து விசாரித்து வருவதாக குறிப்பிட்டனர்.
இதற்கு முன்னர் அரச உளவுச் சேவையின் கிழக்கு மாகாணத்துக்கு உட்பட்டு கடமைகளை முன்னெடுத்த பொலிஸ் சார்ஜன் ஜெஹில்பாஸ் கைது செய்யப்பட்ட நிலையில் அவரை விளக்கமறியல் வைக்க கோட்டை நீதிவான் நீதிமன்றால் உத் தரவிடப்பட்டுள்ளது.
சி.ஐ.டி.யினர் கடந்த ஏப்ரல் மாதம் 08ஆம் திகதி இரவு அவரைக் கைது செய் திருந்த நிலையில் தடுப்பு காவலில் வைத்து விசாரித்த பின்னர் கடந்தவாரம் அவர் விளக்கமறியலில்வைக்கப்பட்டார்.
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களுக்கு முன்னர் அதனுடன் தொடர்புபட்ட சம்பவமாக நடந்த வவுணதீவு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரின் கொலை தொடர்பில், விசாரணைகளை திசை திருப்ப நடவடிக்கை எடுத்தமை தொடர்பில் அந்த பொலிஸ் சார்ஜன் கைது செய்யப்பட்ட நிலையில், அதே குற்றச்சாட்டின் கீழ் இப்போது பொலிஸ் பரிசோதகர் சரத் சமந்தவும் கைது செய்யப்பட்டுள்ளார்.