பரிசோதனை செய்யாமல் விடுவிக்கப்பட்ட ஈஸ்டர் தாக்குதல் வாகனம் : அதிர்ச்சி தகவல்


 உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல் நடத்தப்பட்ட தினத்தன்று குண்டு தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் அடங்கிய வாகனம் களனிகம வீதி சோதனை சாவடியில் வைத்து பரிசோதனை செய்யாமல் விடுவிக்கப்பட்டதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் நேற்று உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர்,
 
வொயிஸ்

உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல் அரசியல் தேவைக்காகவே நடத்தப்பட்டது என்பதற்கு பல விடயங்களை குறிப்பிடலாம்.

தற்கொலை குண்டுதாரியான ஜமீலின் வீட்டுக்கு சி.ஐ.டி.யினர் சென்றமை, மாத்தறை பொடி சஹ்ரான், சொனிக், சொனிக் என்ற சொல், அபூபக்கர், குண்டுத்தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் அடங்கிய வாகனம் களனிகம வீதி சோதனை சாவடியில் வைத்து பரிசோதனை செய்யாமல் விடுவிக்கப்பட்டமை.

அத்துடன் குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் சர்வதேச மட்டத்தில் தகவல் கிடைத்ததாக பிரதி பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜயவர்தன குறிப்பிட்டுள்ளமை உள்ளிட்ட பல காரணிகள் சந்தேகத்தை தோற்றுவித்துள்ளன.

உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல் சம்பவத்தால் 269 இற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்.500 இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தார்கள். பலர் இன்றும் படுக்கையில் விசேட தேவையுடையவர்களாக உள்ளார்கள். இவர்களின் நிலையை கண்டு மைத்திரிபால சிறிசேனவுக்கு மனவேதனை என்பதொன்று இல்லையா?

இந்த சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி தொடர்பில் அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று மைத்திரிபால சிறிசேன சிறுபிள்ளை போல் பேசுகிறார். உண்மையை மக்கள் மத்தியில் பகிரங்கப்படுத்த அவருக்கு தற்றுணிவு கிடையாது.

அரசியல் நோக்கத்துக்காகவே குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது. தற்போது பிரதான சூத்திரதாரியும் அரசியல் நோக்கத்துக்காவே பாதுகாக்கப்படுகிறார்.என தெரிவித்துள்ளார்.  

இதேநேரம்
தமக்கு பாதுகாப்பு தொடர்பில், எவ்வித பிரச்சினையும் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தற்போது போதியளவான பாதுகாப்பு தமக்கு கிடைக்கப்பெறுவதாகவும் அவர் நேற்று ஊடகங்களிடம் தெரிவித்தார்.

இதன்போது, முன்னாள் ஜனாதிபதி,  உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில், அண்மையில் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர்.

எனினும், குறித்த வழக்கு தற்போது, நீதிமன்றில் நிலுவையில் உள்ளதால் அது தொடர்பில், தாம் எவ்வித கருத்தையும் வெளியிட முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.