துருக்கியை உலுக்கிய நிலநடுக்கம்! 270 இலங்கையர்கள் தொடர்பில் வெளிவந்த தகவல்

நேற்றைய தினம் துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து மக்கள் மத்தியில் தங்கள் உறவினர்களின் நலன் குறித்து அச்சம் நிலவி வருகிறது.

இந்த நிலையில், துருக்கியில் தற்போது 270 இலங்கையர்கள் இருப்பதாகவும் அதில் 14 பேர் நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் வசிப்பதாகவும் துருக்கிக்கான இலங்கைத் தூதுவர் அஷந்தி திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

குறித்த 14 பேரில் 13 பேர் பாதுகாப்பாக இருக்கிறார்கள் எனவும் மீட்பு பணிகளின் மூலம் ஒருவரை மாத்திரம் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், காணாமல் போனவரின் இருப்பிடம் தொடர்பில் இதுவரை எந்த தகவலும் இல்லையெனவும் அவரை காப்பாற்ற தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் அஷந்தி திசாநாயக்க மேலும் கூறியுள்ளார்.

இந்த நிலையில், துருக்கியில் வசிக்கும் இலங்கையர்கள் தொடர்பான தகவல்களை இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் தூதரக பிரிவு அல்லது துருக்கியிலுள்ள இலங்கை தூதரகத்திற்கு அறியத்தருமாறு அஷந்தி திசாநாயக்க மேலும் கோரியுள்ளார்.

துருக்கியில் வசிக்கும் இலங்கையர்கள் தொடர்பான தகவல்களை தங்களுக்கு அறியத்தருமாறு துருக்கிக்கான இலங்கைத் தூதுவர் அஷந்தி திசாநாயக்க ஏற்கனவே பொது மக்களிடம் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.