இலங்கை கடற்பரப்பினை அண்மித்த பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.இலங்கையின் கிழக்கு கடற்கரையிலிருந்து 300 கிலோமீற்றர் தொலைவில் கடலுக்கடியில் குறித்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.இது ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகத்தின் தலைவர் அனுர வல்பொல தெரிவித்துள்ளார்.இதன் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
    
 
                                                 
                                                 
                
             
                
             
                
             
                
             
                
             
                
             
                
            