கிழக்கு மாகாணத்தின், மட்டக்களப்பில் இருந்து 310 கிலோ மீற்றர் தொலைவில் கடலில் நில அதிர்வொன்று பதிவாகியுள்ளதாக புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
இன்று (11) அதிகாலை 1.29 அளவில் ரிக்டர் அளவுகோளில், 4.65 மெக்னிடியூட் அளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில், நில அதிர்வால் இலங்கைக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என பணியகம் தெரிவித்துள்ளது.