மைதானத்தில் மோதிக்கொண்ட துனித் - சொரிப்புல் இஸ்லாம் Video

இலங்கை மற்றும் பங்களாதேஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் எப்போதும் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.

இந்நிலையில் பங்களாதேஷ்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி இருபதுக்கு இருபது தொடரை கைப்பற்றியுள்ள நிலையில் தற்போது ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது.

முதலாது ஒருநாள் போட்டியில் பங்களாதேஷ் வெற்றிபெற்றிருந்த நிலையில் நேற்று நடைபெற்ற தீர்மானமிக்க இரண்டாவது போட்டியில் இலங்கை அணி அதிரடியாக வெற்றி பெற்றது.

பரபரபரப்பின் உச்சத்தில் இருந்த போட்டியின் இறுதி பாதியில், துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த இலங்கை அணியின் வீரர் துனித் வெல்லாலகே மற்றும் பங்களாதேஷ் பந்து வீச்சாளர் சொரிப்புல் இஸ்லாம் ஆகியோருக்கு இடையில் மோதல் ஏற்பட்டது.

சொரிப்புல் வீசிய 42 ஓவரின் நான்காவது பந்தில் துனித் வெல்லாலகே ஓட்டமொன்றை விரைந்து பெற்றார்.

இதன்போது சொரிப்புல், துனித் வெல்லாகேவை மோது வகையில் இவ்வாறு நடந்துகொண்டார்.

துனித் வெல்லாகேயின் மைன்ட் செட்டை குழப்பும் வகையில் சொரிப்புல் அநாகரிகமாக நடந்துகொண்டார்.

இந்த நேரத்தில் துனித் வெல்லாலகேவின் விக்கெட் இலங்கை அணிக்கு முக்கியமான ஒன்றாக காணப்பட்டது.

குறிப்பாக இளம் வீரரான துனித் வெல்லாவலை அச்சுறுத்தி மனதளவில் அவரை தாக்கி அவரை விக்கெட் இழக்கச் செய்ய சொரிப்புல் மறைமுகமாக செயற்பட்டார்.

ஆனால் துனித் வெல்லாலகே சொரிப்புல்லின் செயலுக்கு அஞ்சாமல் காணப்பட்டார்.

மேலும் இந்த நேரத்தில் மைதானத்துக்கு வெளியில் இருந்த வீரர்களுடன் கலந்துரையாடி தனது நிதானத்தை கடைப்பிடித்ததோடு பேட்ஸ் மற்றும் கையுறைகளையும் மாற்றிக்கொண்டார்.

நிதானமாக துடுப்பெடுத்தாடிய துனித் வெல்லாலகே இலங்கை அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார்.