பாதணி இறக்குமதி என்ற போர்வையில் பாதணிகளுக்குள் மறைத்து புகைத்தல் பொருட்கள் மற்றும் மதுபான வகைகள் நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டு பாரிய வர்த்தக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுங்கத் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீனா, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் டுபாய் ஆகிய நாடுகளிலிருந்து குறித்த பாதணிகள் இறக்குமதி செய்யப்படுவதுடன், பாதணிகளுக்குள் மதுபான வகைகள் மற்றும் புகைத்தல் பொருட்களை சூட்சுமமான முறையில் மறைத்து வைத்து சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரப்படுகின்றன.
இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் பாதணி ஜோடி ஒன்றுக்கு ரூ.2,000 வரி அறவிடப்படுகிறது. இருந்தும் கொழும்பு புறக்கோட்டை சந்தையில் அவை 1,800 ரூபாவுக்கு விற்று மதுபானம் மற்றும் புகைத்தல் பொருட்களை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் பணத்தில் நட்டம் ஈடு செய்யப்படுகிறது. இதன் மூலம் பாரிய தொகை வருமானம் ஈட்டப்படுகிறது.

பல ஆண்டுகளாக நடைமுறையிலிருந்து வரும் இந்த வர்த்தகத்துக்கு சுங்க அதிகாரிகள் சிலரும் உதவி வருவதாகவும் தெரியவருகிறது.