குஜராத் மாநிலம் அம்ரேலியில் நள்ளிரவில் இரண்டு சிங்கங்கள் கிராமத்தில் புகுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும், சிங்கங்கள் ஒரு வீட்டிற்குள் நுழைய முயன்றபோது, சிங்கங்களை வாயிலுக்குள் நுழையவிடாமல் தடுக்க நாய்கள் சண்டையிட்டுள்ளன.
அஞ்சாத நாய்கள் சிங்கங்களை தைரியமாக விரட்டும் இந்த வீடியோ அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
பின்னர் சிங்கங்கள் அங்கிருந்து ஓடிச் சென்றுள்ளன. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.