இரட்டை தலை பாம்பு இருப்பது பலருக்கு தெரியும். ஆனால் அதை நேரடியாக பார்த்திருக்க வாய்ப்பில்லை.
அந்த வகையில் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள உயிரியல் பூங்காவில் இரட்டை தலைகள் கொண்ட பாம்பு ஒன்று உள்ளது.
அதனை கையாளுபவரான ஜே ப்ரூவர் பாம்பை வீடியோ எடுத்துக்கொண்டிருந்தார்.
இதன்போது அந்த இரட்டை தலை பாம்பு அவரை கடிக்க முயன்றது. இறுதியாக பாம்பு ஜே ப்ரூவரின் விரலைக் கடித்தது.
இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.