நோவக் ஜோகோவிச்சுக்கு விசா ரத்தானத்துக்கு காரணம் இதுதான்

உலகின் முன்னணி டென்னிஸ் நட்சத்திரமான நோவக் ஜோகோவிச் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. மெல்போர்னில் அவுஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டிகள் வருகின்ற 17 ஆம் திகதி தொடங்குகின்றது.இந்த போட்டியில் பங்கேற்கும் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வது கட்டாயம் என்ற விதிமுறை உள்ளது. எனினும் உலகின் முன்னணி வீரரான நோவக் ஜோகோவிச் தடுப்பூசி செலுத்தி கொண்டாரா? இல்லையா ? என்பது குறித்து தகவல் வெளியாகாமலே இருந்தது.இதனால் இவர் போட்டில் பங்கேற்பதில் சிக்கல்கள் நீடித்து வந்தது. எதற்கிடைக்யே தடுப்பூசி விவகாரத்தில் தனக்கு விதி விலக்கு இருப்பதாகவும் அவுஸ்திரேலியா செல்லவுல்லதாகவும் டுவிட்டரில் தெரிவித்திருந்தார். மேலும் கடந்த புதன் கிழமை அன்று இரவு மேல்போர்ன் விமான நிலையம் வந்தடைந்த நிலையில் அவரது விசா ரத்து செய்யப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் 16 ஆம் திகதி இருவருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது தான் எதற்கு காரணமாகும்.