யாழில் துண்டுப்பிரசுரம் விநியோகம்

அரச ஊழியர்கள் தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து யாழில் துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்பட்டுள்ளது.

ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம் மற்றும் தொழிலாளர் போராட்ட மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில், இன்று (வியாழக்கிழமை) காலை 7:30 மணியளவில் யாழ்ப்பாண மாவட்ட செயலகம் முன்பாக இந்த துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது.

அரச ஊழியர்களின் சம்பளத்தை 15 ஆயிரம் ரூபாயால் அதிகரிக்குமாறும் பதவி உயர்வு முறையொன்றையும் கடமைப் பட்டியலும் அடங்கிய அபிவிருத்தி உத்தியோகத்தர் புதிய சேவைகள் யாப்பொன்றை தயாரிக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் புதிய சேவைகள் யாப்பொன்றை தயாரிக்குமாறும் சகல அபிவிருத்தி உத்தியோகத்தர்களினதும் பறிக்கப்பட்ட சேவைக் காலத்தை நிரந்தர சேவையில் இணைக்குமாறும் 2016ஆம் ஆண்டின் பின்னர், அரச சேவைக்கு வந்த அனைவரினதும் பறிக்கப்பட்ட ஓய்வூதிய உரிமையை மீண்டும் வழங்குமாறும் கோரி இந்த துண்டுப்பிரசுர விநியோகம் மேற்கொள்ளப்பட்டது.